TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 11 , 2025 22 days 67 0
  • காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகப்பட்டினம், இராணிப் பேட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதிகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • கேர் எர்த் டிரஸ்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு, தமிழ் நாட்டின் நீர்நிலைகள் மற்றும் ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்குப் போராடியதற்காக, 'ஈரநிலங்களின் முறையானப் பயன்பாடு' என்ற ராம்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • குஜராத் மாநிலதின் தோலேரா நகரில் நாட்டின் முதல் வணிக ரீதியான குறைக்கடத்தி உற்பத்தி மையத்தினை நிறுவுவதற்காக என்று, இந்தியக் குறைக்கடத்தி உற்பத்தித் திட்டமானது (ISM) ஒரு நிதி ஆதரவு ஒப்பந்தத்தில் (FSA) கையெழுத்திட்டுள்ளது.
  • அமுல் (குஜராத்தின் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) நிறுவனமானது அங்கு உள்ளூர் விவசாயிகளுக்கு ஒரு கூட்டுறவு மாதிரியை வழங்குவதற்காக வேண்டி, படிப்படியாக தமிழ்நாட்டின் பால் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது.
  • எழுத்தாளர் நளினி ஜமீலாவின் சுயசரிதையான 'எனது ஆண்கள்' என்ற மலையாள மொழி புத்தகத்தின் மொழிபெயர்ப்பிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த P. விமலா, 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • பெண்கள் அதிகாரமளிப்பதில் பங்களித்ததற்காக வேண்டி அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முக சுந்தரத்திற்கு தமிழக முதல்வர் அவ்வையார் விருதை வழங்கினார்.
  • FIFA கூட்டமைப்பானது, பல்வேறு சர்ச்சைகள் காரணமாக 2026 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ரஷ்யா, காங்கோ மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை FIFA போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலக்கியுள்ளது.
  • இந்திய அணியானது, 2025 ஆம் ஆண்டு ICC சாம்பியன்சிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து நாட்டின் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையினை வென்றுள்ளது.
  • பெங்களூரு நகரத்தின் பல்கலைக்கழகம் ஆனது, மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவாக மறுபெயரிடப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது என்ற வகையில் அவரது பெயரைக் கொண்ட இந்தியாவின் முதல் கல்வி நிறுவனமாக இது இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்