இருக்கை அளவு அடிப்படையில் உலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் ஒரு விமான நிறுவனமாகவும், விமான இயக்க எண்ணிக்கையில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமாகவும் இண்டிகோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் 7வது கடற்படையால் நடத்தப்படும் மேற்கு பசிபிக் பெருங் கடலில் குவாம் நாட்டின் கடற்கரையில் சீ டிராகன் 2025 என்ற கடற்படைப் பயிற்சியில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியக் குடியரசு ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது, வலுவான காப்பீட்டு நிறுவனமாகவும் 9.8 பில்லியன் டாலர்கள் மதிப்புடன் 12வது நிலையான நிறுவனமாகவும் உருவெடுத்து உள்ளது.
அசாம் மாநில அரசு ஆனது, இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்பாட்டிற்கு ரத்தன் டாடா அவர்கள் அளித்த ஒரு பங்களிப்பைப் பாராட்டி அவரது பெயரை அம்மாநில மின்னணு நகரத்திற்கு சூட்ட முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் புலிகள் மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மாதவ் தேசியப் பூங்கா என்பது, இந்தியாவின் 58வது புலிகள் வளங்காப்பகமாகவும் அந்த மாநிலத்தின் 9வது புலிகள் வளங்காப்பகமாகவும் அதிகாரப் பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கி (SBI) ஆனது, பெண் தொழில்முனைவோருக்காக பிரத்தியேகமாக பிணை எதுவும் சமர்ப்பிப்பு இல்லாத 'SBI அஸ்மிதா' எனப்படும் எண்ணிம SME கடனை அறிமுகப் படுத்தியுள்ளது.
கனடாவின் தாராளவாதக் கட்சியின் புதியத் தலைவராகவும், ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பதிலாக நாட்டின் அடுத்தப் பிரதமராகவும் மார்க் கார்னி என்பவர் நியமிக்கப் பட்டு உள்ளார்.