போரூரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மிக அருகில் உள்ள OSR நிலத்தில் சென்னையின் முதல் சதுப்பு நில மழைநீர் உறிஞ்சும்பூங்காவினை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆனது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் 150வது ஆண்டு நிறைவை ஒட்டி, 2027 ஆம் ஆண்டில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) பகல் இரவாக நடைபெற உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியுடன் கொண்டாட உள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கௌத்திமாலாவில் அமைந்துள்ள மிக அதிகளவில் செயல்பாட்டில் உள்ள எரிமலையான வோல்கன் டி ஃபியூகோ ஆனது, 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சமீபத்தில் மீண்டும் வெடித்துள்ளது.
பெண்கள் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (UNCSW) 69வது அமர்வில் இந்தியாவானது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் பங்கேற்றது.
தீவிரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கச் செய்வதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவதற்காக ஜெர்மனியில் 4வது தீவிரவாத நிதியளிப்புத் தடுப்பு (NMFT) மாநாடு ஆனது நடைபெற்றது.
டெல்லி சர்வதேச விமான நிலையமானது, தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஆசிய-பசிபிக் பகுதியில் ஆண்டிற்கு 40 மில்லியன் பயணிகளுக்கு மேலான பயண பதிவு கொண்ட சிறந்த விமான நிலையம் பிரிவில் மதிப்பு மிக்க ASQ விருதை வென்று உள்ளது.
நீர் பயன்பாட்டு திறன் வாரியம் (BWUE) என்பது, எரிசக்தி மற்றும் வளங்கள் என்ற நிறுவனத்துடன் (TERI) இணைந்து, புது டெல்லியில் "நீர் நிலைத்தன்மை மாநாடு 2025" என்ற தலைப்பிலான ஒரு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்தது.
விபத்துகளைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்கும் ஊழியர் நல்வாழ்வை நன்கு உறுதி செய்வதற்கும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் பணியிடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 04 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 54வது தேசியப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப் பட்டது.