TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 17 , 2025 16 days 66 0
  • வங்கி சாரா நிதி நிறுவனமான IFL ஃபைனான்ஸ் நிறுவனமானது, மகளிர் தினத்தினை முன்னிட்டு, ஏற்கனவே உள்ள ஏழு கிளைகளை அனைத்து மகளிர் பணியாளர்களைக் கொண்ட 'சக்தி' வங்கிக் கிளைகளாக மாற்றியுள்ளது.
  • பிரதான் மந்திரி சூர்யா கர்: முஃப்த் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டமானது, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி நிலவரப்படி, சூரிய சக்தியில் இயங்கும் 10 லட்சம் வீடுகளை நிறுவி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
  • சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL) நிறுவனமானது மெட்ரோ ரயில் நிலையம் கட்டமைப்பதற்காக வேண்டி இரண்டு கோயில்களில் இருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தினை தொடர்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
    • பொது நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் இருந்து விலகுவதற்கு மத நிறுவனங்களுக்கு எந்தச் சிறப்பு உரிமையும் இல்லை என்றும் அது தீர்ப்பளித்து உள்ளது.
  • உலகம் முழுவதும் உள்ள சுழற்சங்கங்கள் (ரோட்டரி) வழங்கும் பல்வேறு சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 13 ஆம் தேதியன்று உலகச் சுழற் சங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்