சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் 160வது ஆண்டு நிறைவு மற்றும் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதன்75வது ஆண்டு விழா நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆனது சென்னையில் நடைபெற்றன.
தமிழ்நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான R. நாறும்பூ நாதன் (64) சமீபத்தில் காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான சைவக் கோவிலில் ஒரு சிறிய பாதாள அறை கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரு நீர் வழங்கீட்டு மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) ஆனது, அதன் குழாய் வழி குடிநீர் விநியோக மேலாண்மை கட்டமைப்புக்காக என இந்தியத் தரநிலைகள் வாரியத்திலிருந்து (BIS) சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் குடிநீர் வாரியமாக மாறியுள்ளது.
கூகுள் நிறுவனமானது, தொலைபேசிகள், மடிக் கணினிகள் மற்றும் இன்ன பிற சாதனங்களில் நேரடியாக இயங்குவதற்காக என்று வடிவமைக்கப்பட்டு உள்ள அதன் மிகவும் இலகுரக பொதுப் பயன்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் குழுமத்தில் ஜெம்மா 3 எனும் மாதிரியினைச் சமீபத்தில் சேர்த்து உள்ளது.
கடந்த 42 நாட்களாகப் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாமல் இருந்ததை அடுத்து, தான்சானியா நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது மார்பர்க் வைரஸ் (MVD) தொற்றானது முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலை நிறுத்தவும், மக்களின் மதம் சார் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான சமூகங்களை உருவாக்க இஸ்லாமியத்திற்கு எதிரான மிகப் பெரும் வெறுப்பு உணர்வினை எதிர்ப்பதற்கான ஒரு சர்வதேச தினம் ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.