சங்க காலம் முதல் இன்று வரையில் மாநிலத்தின் நிதி மேலாண்மையை மிக நன்கு விவரிக்கும் 'தமிழ்நாடு நிதி மேலாண்மை: தொன்மை மற்றும் அதன் தொடர்ச்சி' என்ற புத்தகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகக் நிறுவனத்தில் (IIT-M) திரவம் மற்றும் வெப்ப அறிவியலுக்கான மிக அதிநவீன ஆராய்ச்சி மையம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடற்படைக்கான ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களில் (FSS) இரண்டாவது கப்பலின் கட்டுமானப் பணித் தொடக்க விழாவானது, காட்டுப்பள்ளியில் உள்ள L&T கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
மேகாலயாவின் ஷில்லாங் நகரில், வடகிழக்குத் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அணுகல் மையத்தின் (NECTAR) புதிய நிரந்தர வளாகத்தினை நிறுவச் செய்வதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நாட்டின் வெளிக் கொணரப்படாத/பயன்படுத்தப்படாத முக்கியமான மற்றும் ஆழமான பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை கொணர்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மிகவும் ஒரு குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தமான இந்தியாவின் முதல் ஆய்வு உரிமத்திற்கான ஏலம் ஆனது கோவாவில் நடைபெற்றது.
Valueattics Re என்ற நிறுவனமானது, இந்தியாவில் மறுகாப்பீட்டு வணிகத்தைத் தொடங்குவதற்காக என்று காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று இந்தியாவில் மறுகாப்பீட்டு உரிமம் வழங்கப்பட்ட முதல் தனியார் மறு காப்பீட்டு நிறுவனமாக மாறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு ஆனது, "Compassion and primary health care" என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்ற ஒரு நிலையில் இது ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் இரக்க உணர்வினை ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் சக்தியாக அங்கீகரிக்கிறது.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 353வது ஆளுகைக் குழு கூட்டம் ஆனது சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.