TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2025 10 days 52 0
  • தமிழ்நாடு மாநிலமானது, மார்ச் 21 முதல் 25 ஆம் தேதி வரையில் அலுவல் மொழி சட்ட வாரத்தைக் கொண்டாடுகிறது.
  • தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் ஆனது, ஒரு சுற்றுலாத் தலமாக மாநிலத்தின் திறனை வெளிப்படுத்துவதற்கும், சுற்றுலா வணிகத்தினை ஊக்குவிப்பதற்கும், என்று சுற்றுலா தொடர்பான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பயணச் சந்தையை ஏற்பாடு செய்ய உள்ளது.
  • தமிழ்நாடு அரசு ஆனது, அதன் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (AAG) பதவியை மூத்த வழக்கறிஞர் M. அஜ்மல் கான் என்பவருக்கு அளித்ததையடுத்து தற்போது அவர் AAG-I ஆக நியமிக்கப்பட உள்ளார்.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது, உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதற்கும், மூலதனச் சந்தைகளை வலுப்படுத்துவதற்கும், மேலும் பசிபிக் பிராந்தியத்தில் மிக நிலையான பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் எல்லைப்புற ஊக்குவிப்பு (பசிபிக்) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • தானேயின் பிவாண்டி எனுமிடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிற்காக நிறுவப்பட்டு உள்ள அந்த மாநிலத்தின் முதல் கோவிலை மகாராஷ்டிரா மாநில முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
  • அசாமின் டெர்கானில் லச்சித் பர்புகன் காவல் துறை பயிற்சிக் கழகம் திறக்கப்பட்டு உள்ளது.
  • இந்தியா மற்றும் மலேசியா ஆகியவை இரண்டும் இணைந்து தலைமை தாங்கிய ஆசியான் அமைப்பின் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் - பிளஸ் (ADMM-பிளஸ்) அமைப்பின் நிபுணர்கள் பணிக்குழுவின் (EWG) 14வது கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்தத் தீவிரவாத எதிர்ப்புக் குழுவிற்கு இந்தியா முதல் முறையாகத் தலைமை தாங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்