TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 22 , 2025 9 days 58 0

v சிந்து சமவெளி நாகரிகத்தின் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தளங்களின் மீதான அகழ்வாராய்ச்சியில் மிகவும் முக்கியப் பங்கினை வகித்த பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர். ஜான் ஹூபர்ட் மார்ஷலின் சிலையைச் சென்னை எழும்பூரில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

v தெரு நாய்களால் வளர்ப்பு விலங்குகள் /பறவைகள் ஏதேனும் கொல்லப்பட்டால் அந்த விவசாயிகளுக்கு, ஒரு மாடுகளுக்கு 37,500 ரூபாயும், செம்மறி ஆட்டிற்கு 6,000 ரூபாய் மற்றும் ஒரு கோழிக்கு 200 ரூபாய் என்ற வீதத்தில் இழப்பீடு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

v புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளையானது, சுற்றுச்சூழல் ஏற்பு இசைவு இல்லாமல் புதுச்சேரியில் கட்டமைக்கப்படுவதற்காக வேண்டி முன்மொழியப்பட்டுள்ள நகரக் கட்டமைப்புத் திட்டத்தினை தொடர்வதற்கு தடை விதித்த சென்னை தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் 2022 ஆம் ஆண்டு உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

v பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ், பசுமைக் கழிவுகளைச் மிக நன்கு செயல்முறையாக்கும் இந்தியாவின் முதலாவது ஆலையை நிறுவுவதன் மூலம் நிலையான கழிவு மேலாண்மையில் இந்தூர் நகரம் மற்றொரு மைல்கல்லை அடைய உள்ளது.

v 2025 ஆம் ஆண்டு கபடி உலகக் கோப்பை போட்டியானது, இங்கிலாந்தில் தொடங்க உள்ளது என்பதோடு இது ஆசியாவிற்கு வெளியே வேறொரு கண்டத்தில் நடைபெறும் முதல் போட்டியாகும்.

v கோவா கடற்கரையில் இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே 23வது 'வருணா' இரு தரப்பு கடற்படைப் பயிற்சி நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்