TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2025 8 days 62 0
  • தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா நாராயணன் (7), உலகின் மிகவும் இளம் டைக்வாண்டோ பயிற்றுவிப்பாளராக மாறி கின்னஸ் உலக சாதனையினைப் படைத்துள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 1,540 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது என்பதோடு இது கடந்த 12 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்த ஒரு வருடாந்திர எண்ணிக்கை ஆகும்.
  • சென்னை மெட்ரோ இரயில் அமைப்பின் இரண்டாம் கட்டத்திற்கான மெட்ரோ ரயில் போக்குவரத்து வலையமைப்பிற்கான முதல் ஓட்டுநர் இல்லாத இரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • புது டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு Medical Colleges Research Connect நிகழ்வில் அதன் செயல்திறனுக்காக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
  • அறிஞரும் கோட்பாட்டாளருமான காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் 2025 ஆம் ஆண்டு ஹோல்பெர்க் பரிசை வென்றுள்ளார் என்ற ஒரு நிலைமையில் இது மனித நேயம், சமூக அறிவியல், சட்டம் அல்லது இறையியல் ஆராய்ச்சித் துறையில் நோபல் பரிசுக்கு சமமான விருதாகக் கருதப்படுகிறது.
  • சுரங்க அமைச்சகம் ஆனது, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்துடன் (GSI) இணைந்து கனிம இலக்கு குறித்த IndiaAI ஹேக்கத்தானைத் தொடங்கியுள்ளது.
  • ஹரியானாவில் உள்ள கோரக்பூர் என்ற ஒரு சிறிய நகரத்தில் 10,380 மெகாவாட் திறன் கொண்ட வட இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் நிறுவப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்