சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வனப் பிரிவில் நடத்தப்பட்டப் பறவைகள் கணக்கெடுப்புகளின் போது 162 இனங்களைச் சேர்ந்த 3,100க்கும் மேற்பட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
திருச்சியில் கலைஞர் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் என்பது அதிநவீன வசதிகளுடன் நிறுவப்பட உள்ளது.
வேலூரின் CMC நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் V.I. மதன், "To the Seventh Generation: The Journey of Christian Medical College Vellore" என்ற ஒரு தலைப்பிலான தனது புத்தகத்தினை சென்னையில் வெளியிட்டார்.
உலக வங்கியின் உதவியுடன் இயங்கும் தமிழ்நாடு அரசின் நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் (TNIAMP) ஆனது, மத்திய நீர்ப்பாசனம் மற்றும் மின் வாரியத்தின் (CBIP) 'ஒருங்கிணைந்த நீர்வளத்தின் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்வதற்கான 2024 ஆம் ஆண்டு' தேசிய விருதை வென்றுள்ளது.
மேம்பட்ட திறன் கொண்ட போர்க் கப்பலான ஹிம்கிரி மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஆண்ட்ரோத் ஆகியவை கட்டுமான நிறுவனத்தின் கடல் சார் இயக்க சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
அசாமின் நம்ரூப் எனுமிடத்தில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர உற்பத்திக் கழக லிமிடெட் (BVFCL) என்ற நிறுவனத்தில் முன்னதாக மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப் பட்ட பகுதியில் புதிய அம்மோனியா-யூரியா உற்பத்தி வளாகத்தினை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியப் பத்திரிகைத் துறைக்கு என மிகவும் சிறந்தப் பங்களிப்பை வழங்கிய 27 பத்திரிகையாளர்களுக்கு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இராம்நாத் கோயங்கா பத்திரிகை சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்னிந்தியாவிற்கான டென்மார்க்கின் கெளரவத் தலைமை தூதரும், சன்மார் குழுமத்தின் தலைவருமான விஜய் சங்கருக்கு, டென்மார்க் மன்னரால் மதிப்புமிக்க நைட்ஸ் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் டேன்பிராக் விருது வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் நீண்ட கால நிலைத் தன்மைக்கான ஒரு முக்கியச் செயற்கருவியாக மறுசுழற்சியினை நன்கு அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக வேண்டி ஆண்டுதோறும் மார்ச் 18 ஆம் தேதி உலகளாவிய மறுசுழற்சி தினம் கொண்டாடப் படுகிறது.
மொழியியல் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச உறவுகளில் பிரெஞ்சு மொழியின் முக்கியப் பங்கைக் கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பிரெஞ்சு மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.