TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 25 , 2025 6 days 50 0
  • தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் (JAC) கூட்டத்தினைத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம் (MoPSW), பசுமை முறையிலான ஒரு கப்பல் போக்குவரத்து, திறன்மிகு துறைமுகங்கள் மற்றும் தளவாடங்களில் கடல்சார் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி சாகர்மாலா புத்தொழில் புத்தாக்க முன்னெடுப்பினைத் (S2I2) தொடங்கியுள்ளது.
  • 2024–25 ஆம் நிதியாண்டிற்கான தனிநபர் வணிகத்திற்கு மேற்கொள்ளும்  குறைந்த மதிப்புள்ள அதாவது சுமார் 2,000 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான BHIM-UPI பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு ஊக்கத் திட்டத்தினை நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • டார்ஜிலிங்கின் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவானது, அருகி வரும் இமயமலை உயிரினங்களின் மரபணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக என்று இந்தியாவின் முதல் உறைந்த/பதப்படுத்தப்பட்ட விலங்கியல் பூங்காவைத் தொடங்கி உள்ளது.
  • டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனமானது, நிறுவனங்களுக்கு என்று செலவு குறைந்த மேகக் கணினி நுட்பத்தினை வழங்குவதற்காக வேண்டி வாயு எனும் அடுத்த தலைமுறை நுட்பத்திலான மேகக் கணிம கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் பெற்ற வெற்றியின் பொன் விழாவை நினைவு கூரும் வகையில், ஹாக்கி வரலாற்றாசிரியர் K.ஆறுமுகம் மற்றும் பத்திரிகையாளர் எரோல் டி’குரூஸ் இணைந்து எழுதிய ‘March of Glory’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான கீதம், உருவச்சின்னம் (உஜ்வாலா) மற்றும் முத்திரையினை புது டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது.
  • நயாரா எனர்ஜி நிறுவனம் ஆனது, குஜராத் ஜாம்நகரில் உள்ள கிஜாடியா பறவைகள் சரணாலயத்தின் வளங்காப்பு மற்றும் மறுசீரமைப்பிற்காக குஜராத் மாநில அரசின் வனத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
  • கிழக்குக் கடற்கரை இரயில்வே (ECoR) நிர்வாகமானது, 2024-25 ஆம் நிதியாண்டில் 250 மில்லியன் டன் (MT) சரக்குகளை ஏற்றிய இந்தியாவின் முதல் இரயில்வே மண்டலமாக மாறி சரக்கு ஏற்றுதலில் ஒரு வரலாற்று மைல்கல்லை அமைத்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, 1953 ஆம் ஆண்டு தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் தனி ஆந்திர மாநிலத்தினை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகித்த சுதந்திரப் போராட்ட வீரர் பொட்டி ஸ்ரீராமுலுவின் 58 அடி உயரம் கொண்ட சிலையை அமராவதியில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்