ஒரு முன்னாள் சர்வதேச நீச்சல் வீராங்கனையான ஜிம்பாப்வே நாட்டினைச் சேர்ந்த கிறிஸ்டி கோவென்ட்ரி, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் 130 ஆண்டு கால வரலாற்றில் அதன் தலைவராகப் பொறுப்பேற்க உள்ள முதல் பெண் மற்றும் ஆப்பிரிக்கக் கண்ட வம்சாவளியினைச் சேர்ந்த நபர் ஆவார்.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, மிசோரமில் இருந்து சிங்கப்பூருக்கு முதன் முறையாக அந்தூரியம் பூக்களை ஏற்றுமதி செய்ய உதவியுள்ளது.
இந்தியக் கடற்படையானது தவாஸ்யா எனப்படும் 1135.6 கூடுதல் வகைத் தொடர் சார் கப்பல்கள் திட்டத்தின் கீழான தன் இரண்டாவது போர்க் கப்பலினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தத் தொடரில் முதல் கப்பலான திரிபுட் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் படையில் இணைக்கப்பட்டது.
உலகளாவிய வெளிப்பாட்டு ஊடகமாக கவிதை திகழ்வதன் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று உலக கவிதை தினம் கொண்டாடப் படுகிறது.