முன்னாள் அமைச்சரவை செயலாளரான இராஜீவ் கௌபா நிதி ஆயோக் அமைப்பின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியா நாட்டு அரசானது, BRICS நாடுகளால் நிறுவப் பட்ட ஒரு பலதரப்பு நிதி நிறுவனமான புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) இணைய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐக்கியப் பேரரசின் வால்வர்ஹாம்டனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆடவர் மற்றும் மகளிர் கபடி உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிகளானது வெற்றிப் பெற்றுள்ளன.
இந்திய மல்யுத்த வீரர் சுனில் குமார் ஜோர்டான் நாட்டின் அம்மான் என்னுமிடத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்தச் சாம்பியன்ஷிப் போட்டியில் 87 கிலோ எடைப் பிரிவின் கிரேக்க-ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
புதிய மேம்பாட்டு வங்கியானது 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலக் கட்டத்திற்கு தில்மா வனா ரூசெஃப்பினை அதன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.
ஒட்டு மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் தொடர்பான உண்மையறியும் உரிமைக்கான சர்வதேச தினமானது ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.