தமிழ்நாடு சட்ட சபையானது, 2024 ஆம் ஆண்டு வக்ஃப் (திருத்த) மசோதாவானது நம் நாட்டில் உள்ள முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிரானது என்ற ஒரு வாதத்தினை முன் வைத்து, அதனை திரும்பப் பெறுமாறு மத்திய அரசினை மிக நன்கு வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தினை ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவத் தலைவர்களும், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவர் குழு தலைவர்களும் ஒன்பது ஆண்டு கால (2016-2025) இடைவெளிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானியின் சுயசரிதையான 'Stumped: Life Behind and Beyond the Twenty-Two Yards’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஐநா பணியாளர்களுக்கான சர்வதேச ஒன்றிணைவு தினமானது, நடவடிக்கைகளை ஒன்று திரட்டுவதற்காகவும், நீதியைக் கோருவதற்காகவும், ஐக்கிய நாடுகள் சபையின் ஊழியர்களையும் அமைதி காக்கும் படையினரையும் பாதுகாப்பதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காகவும் மார்ச் 25 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.