TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 31 , 2025 2 days 60 0
  • 2025-26 ஆம் ஆண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் கட்டமைப்பதற்காக என தமிழ்நாடு அரசு 3,500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செங்குத்தாக ஏவப்படக்கூடிய குறுகிய தூர தாக்குதல் வரம்புடைய நிலத்திலிருந்து வானில் ஏவக்கூடிய எறிகணையின் (VLSRSAM) ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆனது கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • புது டெல்லியில் உள்ள வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் யுகே யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டப் புதிய தேசிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகளைத் தவிர்ப்பதற்காக ஒரு தேசியப் பணிக் குழுவை (NTF) அமைத்து உள்ளது.
  • முன்னாள் அமலாக்க இயக்குநரக (ED) தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ரா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) ஒரு முழுநேர உறுப்பினராக என நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான அவரது நிறுவனமானது சுமார் 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கடந்த பிறகு, அவரது JSW எஃகு நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்புமிக்க எஃகு உற்பத்தி நிறுவனமாக மாறி உள்ளது.
  • HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ஹுருன் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் பணக்காரப் பெண்மணிகள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் (5வது இடம்) இடம் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்