TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 1 , 2025 3 days 44 0
  • ஆறு ஆண்டு காலத்திற்கு 22,919 கோடி ரூபாய் மதிப்பிலான மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகமானது, நாட்டில்  உள்ள அனைத்து மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் மழலையர் பள்ளி பாடல்கள் மற்றும் அதற்கான கவிதைகளின் தொகுப்பைத் தயாரிப்பதற்காக "பால்பன் கி கவிதா" முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் கொலம்பியா நாட்டின் அரசாங்கத்தினால் நடத்தப் பட்ட இரண்டாவது காற்று மாசுபாடு மற்றும் சுகாதார மாநாடு ஆனது கொலம்பியா நாட்டின் கார்டஜெனா என்னுமிடத்தில் நடைபெற்றது.
  • குஜராத்தில் உள்ள ஆனந்த் கிராமப்புற மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (IRMA) இந்தியாவின் முதல் தேசியக் கூட்டுறவுப் பல்கலைக்கழகத்தினை உருவாக்கச் செய்வதற்கான 2025 ஆம் ஆண்டு திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழக மசோதாவினை மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தியாவின் இரட்டையர் பாட்மிண்டன்/பூப்பந்து போட்டி நிபுணரான தெலுங்கானா மாநிலத்தின் B. சுமீத் ரெட்டி தொழில்முறை பாட்மிண்டன் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • INDRA எனப்படும் இந்திய - ரஷ்யா இடையிலான 14வது இருதரப்பு கடற்படைப் பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்