உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,481 கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளால் நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களில் 21.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓலா மற்றும் ஊபர் போன்ற வாடகை வாகன சேவை மாதிரி வழியில் உருவாக்கப்பட்ட 'சஹ்கார்' என்ற புதிய செயலி அடிப்படையிலான ஒரு வாடகை வாகனச் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவின் (FATF) 2025 ஆம் ஆண்டு தனியார் துறைக் கூட்டுறவு மன்றம் (PSCF) ஆனது மும்பை நகரில் நடைபெற்றது.
நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் உயிரி தொழில்நுட்பம் சார் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பயோசார்த்தி வழிகாட்டுதல் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, அதன் 2004 ஆம் ஆண்டிற்கான மனநலக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் சேவை வழிகாட்டுதல் தொகுப்பிற்குப் பதிலாக, உலக நாடுகள் மனநலச் சேவை வழங்கீட்டு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான மிகத் தெளிவான ஒரு வழிமுறையை வழங்குகின்ற, மனநலக் கொள்கை மற்றும் உத்தி சார் செயல் திட்டங்கள் குறித்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.