துபாயைப் போலவே, நகரத்தின் முக்கியமான சாலைகளில் உணவு மற்றும் இணைய வழி வணிகப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள இணைய வழி மூலம் திரட்டப் படும் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளைக் கட்டமைப்பதற்குப் பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களை கையாள்வதற்காக மகாராஷ்டிரா அரசு கூடுதல் செயலாளர் (உள்துறை) தலைமையின் கீழ் ஒரு பிரத்தியேகப் பிரிவை அமைத்துள்ளது.
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இயக்கக் கூடிய வகையிலான ஆயுத தளத்தின் பீரங்கி எதிர்ப்பு நாக் எறிகணை அமைப்பு (NAMIS) மற்றும் ஆயுதப் படைகளுக்குச் சுமார் 5,000 இலகுரக வாகனங்கள் ஆகியவற்றைச் சுமார் 2,500 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்வதற்காக வேண்டி பாதுகாப்புத் துறை அமைச்சகமானது பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பியானோ இசைக் கருவியில் உள்ள 88 பொத்தான்களின் எண்ணிக்கை காரணமாக, உலகப் பியானோ தினம் ஆனது ஆண்டின் 88 ஆம் நாளான மார்ச் 28 ஆம் தேதி (லீப் ஆண்டாக இருந்தால்) அல்லது மார்ச் 29 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது.
பிரதமரான பிறகு முதல் முறையாக இந்தியப் பிரதமர் மோடி நாக்பூரில் உள்ள RSS தலைமையகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் 2000வது ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்த போது இங்கு வருகை தந்தார்.