திருச்சியில் சுமார் 290 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு முன்னாள் தமிழக முதல்வர் K. காமராஜர் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது.
சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய சில இடங்களில் ஏற்படுத்தப் பட்டு உள்ள பெரிய நூலகங்கள் முறையே முன்னாள் முதல்வர்களான CN அண்ணாதுரை, M. கருணாநிதி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதிபெரியார் EV ராமசாமி ஆகியோர் பெயரில் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, நீலகிரி மற்றும் கொடைக் கானலில் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் புதிய இணைய வழி அனுமதிச் சீட்டு முறையானது ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல் பாட்டுக்கு வந்துள்ளது என்பதோடு இது ஜூன் 30 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.
ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவிற்கு, அவரின் அமைதி மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்ட நிர்வாகத்திற்காக மதிப்புமிக்க கோல்ட் மெர்குரி விருதானது தர்மசாலாவில் உள்ள அவரது இல்லத்தில் வழங்கப்பட்டது.
ஹரியானாவின் ஹிசார் நகரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அக்ரசென் மகாராஜாவின் பிரமாண்ட சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது.
டைகர் ட்ரையம்ப் 2025 (Tiger Triumph) எனப்படும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் முப்படைகளின் நான்காவது பயிற்சியானது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப் பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
ரெனால்ட் குழுமம் ஆனது நிசான் நிறுவனம் தற்போது கொண்டுள்ள 51 சதவீதப் பங்குகளை வாங்கியதையடுத்து, ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (RNAIPL) நிறுவனத்தின் 100 சதவீதக் கட்டுப்பாட்டை ஏற்க உள்ளது.
இந்திய விமானப்படை (IAF) ஆனது, அமெரிக்கா, பிரான்சு, ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து கிரீஸ் நாட்டில் நடைபெற்று வரும் INIOCHOS-25 எனப்படும் பன்னாட்டு விமானப் பயிற்சியில் பங்கேற்று வருகிறது.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைமை இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ரோசி, அணுசக்தி வழங்கீட்டுக் குழுமத்தில் (NSG) இணையச் செய்வதற்கான இந்தியாவின் முயற்சிக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள இந்திய இராணுவத்தின் கிழக்குப் படைப்பிரிவானது, கிழக்குப் பயிற்சித் தளத்தில் பிரசாந்த் பிரஹார்-2025 எனப் படும் முப்படைகளின் ஒருங்கிணைந்த பல்துறைக் கூட்டுப் போர்ப் பயிற்சியினை மேற்கொண்டது.
இணைய சங்கேதப் பணம் சார்ந்த சொத்துக்களை ஒரு நிதி சார் கூறாக சட்டப் பூர்வ அந்தஸ்தை வழங்குவதற்காக அதன் நிதியியல் செயற்கருவிகள் மற்றும் பரிமாற்றச் சட்டத்தினைத் திருத்தியமைக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதியன்று, திருநர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக நாடுகள் ஆனது திருநர்களின் கட்புலனாகும் நிலை தினத்தினை (TDOV) அனுசரிக்கிறது.