TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 5 , 2025 14 days 58 0
  • கோயம்புத்தூரில் உள்ள கீரநத்தம் கிராமப் பஞ்சாயத்துப் பொதுமக்களை நெகிழிப் பொருட்களை கொண்டு வந்து ஒப்படைத்து ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் என்ற வீதத்தில் சன்மானத்தினைப் பெற ஊக்குவித்துள்ளது.
  • மகிழ்ச்சி குறித்த ஆய்வுகளை கல்விப் பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதைப் பெரும் நோக்கமாகக் கொண்டு, மெட்ராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, மகிழ்ச்சி அறிவியலுக்கான ரேகி சிறப்பு மையத்தினை நிறுவியுள்ளது.
  • சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வலை அமைப்பிற்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தினை டெல்லி மெட்ரோ இரயில் கழகம் (DMRC) பெற்றுள்ளது.
  • வாரீ எனர்ஜிஸ் லிமிடெட் நிறுவனமானது, குஜராத்தில் உள்ள சிக்லியில் 5.4 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியதான ஒரு சூரிய மின்கல உற்பத்தி மையத்தினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • குஜராத் மாநில முதல்வர் குஜராத்தின் டாஹேஜ் பகுதியில் குஜராத் ஆல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் (GACL) என்ற நிறுவனத்தினால் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய குளோரோடோலூயீன் ஆலையை திறந்து வைத்துள்ளார்.
  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஆனது, பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் இந்தியாவின் முதல் நுண் மின்னணுவியல் கண்காட்சியை மிகவும் வெற்றிகரமாக நடத்தியது.
  • கடற்படை துணை  அதிகாரி K. தில்னா மற்றும் A. ரூபா ஆகிய பெண் அதிகாரிகளைக் கொண்ட இந்தியக் கடற்படை பாய்மரக் கப்பல் (INSV) தாரிணி, நவிகா சாகர் பரிக்ரமா II என்ற உலகளாவியச் சுற்றுப்பாதைப் பயணத்தின் தனது நான்காவது மற்றும் இறுதி நிறுத்தமாக தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரை வந்தடைந்தது.
  • கானா நாட்டைச் சேர்ந்த ஷெர்லி போட்ச்வே காமன்வெல்த் நாடுகளின் 7வது பொதுச் செயலாளராகப் பதவியேற்று இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்