நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வனவிலங்குப் பாதுகாப்பு பகுதியில் உள்ள கோடியக்கரை மற்றும் ஆற்காட்டுதுறை குஞ்சுப் பொரிப்புத் தளங்களிலிருந்து 7,100க்கும் மேற்பட்ட சிற்றாமைக் குஞ்சுகள் கடலில் விடப் பட்டுள்ளன.
சென்னையில் ஜெர்மனி நாட்டுத் தத்துவஞானி மற்றும் சமூகவுடைமை (சோசலிச) தலைவர் கார்ல் மார்க்ஸின் சிலை மற்றும் மறைந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரான P.K. மூக்கையா தேவருக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நினைவுகம் ஆகியவை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செயற்கைக் கரு மாற்ற (IVF-ET) தொழில்நுட்பத்தின் மூலம் கருப்பெற்ற முதல் கன்று வில்லியனூர் அருகே உள்ள கனுவாப்பேட்டை கிராமத்தில் பிறந்துள்ளது.
தெலுங்கானா பகுதியில் விளையும் வாரங்கல் சப்பாட்டா மிளகாய் அல்லது தக்காளி மிளகாய் என அழைக்கப்படும் வாரங்கல் சப்பாட்டா மிளகாய்க்கு சென்னைப் புவி சார் குறியீட்டு ஆணையத்தினால் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜமால்பூரைச் சேர்ந்தக் கைவினைஞர் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டப் புகழ்பெற்ற சௌதாகரி அச்சு வேலைப் பாடுகள் கொண்ட துணிகள், அதன் தனித்துவமான கைவினைத் திறனுக்காக புவிசார் குறியீட்டினைப் (GI) பெற்றுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான N. சந்திரசேகரன், சர்வதேச நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குநரின் தொழில்முனைவோர் மற்றும் அதன் வளர்ச்சி ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளார்.
ஜோர்டானின் அம்மான் நகரில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
தவறான தகவல்களைக் கண்டறிந்து, இயங்கலையில் தவறான தகவல்கள் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்காக ஏப்ரல் 02 ஆம் தேதியன்று சர்வதேச உண்மைச் சரிபார்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.