2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 20,000 கோடி ரூபாயினைக் கடனாக வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், திடீர் வெள்ளம், மேக வெடிப்பு, நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டப் பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சுமார் 1,280.35 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் கூடுதல் நிதி உதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான ஒரு உயர்மட்டக் குழுவானது (HLC) அங்கீகாரம் அளித்துள்ளது.
50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்கள்தொகை மற்றும் குறைந்தது 20,000 பழங்குடியினர் வசிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பள்ளியை நிறுவச் செய்வதை உறுதி செய்யும் வகையில், 440 ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளை (EMRS) நிறுவும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாரிசு உடன்படிக்கையின் 6.2 என்ற பிரிவின் கீழ் உமிழ்வுக் குறைப்பு மதிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவும் ஜப்பானும் கூட்டு மதிப்பு நெறிமுறையை (JCM) இறுதி செய்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் 2.14 டிரில்லியன் டாலராக இருந்த இந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு (M&E) துறையின் மதிப்பானது, 2023 ஆம் ஆண்டில் சுமார் 8.1% அதிகரித்து, 2.32 டிரில்லியனை எட்டியது என்பதோடு மேலும் இது 2026 ஆம் ஆண்டில் 3.08 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.