மிகவும் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பருத்தி சேலை மற்றும் இராசிபுரம் பட்டுப் புடவை நெசவாளர்கள் புவி சார் குறியீடு (GI) பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
குஜராத்தின் நவ்சாரி என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்திலிருந்து அதன் பெயரைப் பெற்ற அமல்சாத் சிக்கூ எனும் பழமானது புவிசார் குறியீட்டினை (GI) பெற்று உள்ளது.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் நியூ ராய்ப்பூர் நகரில் அமைக்கப்பட உள்ள மாநிலத்தின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) அடிப்படையிலான குறைக்கடத்தி மீதான உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஜப்பான் நாடானது, முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் இரயில் நிலையத்தினை வெறும் ஆறு மணி நேரத்தில் கட்டமைத்துள்ளது.
62வது தேசிய கடல்சார் தினத்தின் போது, சினெர்ஜி மரைன் குழுமத்தின் நிறுவனர் இராஜேஷ் உன்னி 2025 ஆம் ஆண்டு தேசியக் கடல்சார் வருணா என்ற விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகின்ற வட்டார மற்றும் எளிதில் பாதிக்கப் படக் கூடிய ஒரு இனமான மலபார் சாம்பல் இருவாட்சிகளை மிகவும் நன்கு பாதுகாப்பதற்கான திட்டத்திற்காக என்று கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கு வேண்டி, வளங்காப்பு முன்னணித்துவத் திட்டத்தின் (CLP) எதிர்கால வளங் காப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரதீப் துறைமுகமானது, இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில், 150.41 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) அளவிலான சரக்குகளைக் கையாண்டு, அதனால் சரக்குகளைக் கையாளுதலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதன் முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.