TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2025 3 days 45 0
  • இயங்கு படம், மெருகுக் காட்சிகள், விளையாட்டு செயலிகள், கேலிச் சித்திரங்கள் நுட்பம் மற்றும் விரிவுப்படுத்தப்பட்ட (மெய் மற்றும் மிகை மெய்த் தோற்றங்களின் கலவை) மெய்த் தோற்றங்கள் (AVGC-XR) துறைக்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தினை நிறுவுவதற்காக மும்பையில் உள்ள இந்தியப் படைப்பாக்க நுட்பக் கல்வி நிறுவனம் (IICT) பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
  • மேகாலயா மாநில அரசானது, குழந்தைகளின் கட்டாய உயிரியளவியல் தகவல் மீதான புதுப்பிப்புகளை மேற்கொள்வதிலும், அங்கு வயது வந்தோரின் ஆதார் சேர்க்கையை நன்கு சரிபார்ப்பதிலும் சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநிலமாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து (UIDAI) இரண்டு சிறந்த விருதுகளைப் பெற்றது.
  • ACI வேர்ல்டு நிறுவனத்தின் கூற்றுப் படி, டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆனது, 2024 ஆம் ஆண்டில் உலகின் 9வது பரபரப்பான விமான நிலையமாக மாறி உள்ளது.
  • இந்திய எண்ணெய் உற்பத்திக் கழக நிறுவனம் (IOC) ஆனது, ஒடிசாவில் உள்ள அதன் பாரதீப் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் மிக உலகத் தரம் வாய்ந்த பெட்ரோலிய வேதியியல் வளாகத்தினை அமைக்க 61,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
  • இந்திய உட்சுரப்பியல் (நாளமில்லா சுரப்பி) நிபுணர் டாக்டர் அம்ப்ரிஷ் மிதலுக்கு, எலும்புப் புரை ஆராய்ச்சிக்கு ஆற்றிய மகத்தானப் பங்களிப்புகளுக்காக சர்வதேச எலும்புப் புரை அறக்கட்டளையால் (IOF) 2025 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆலோசகர்கள் குழுவின் (CSA) சாதனைப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசியப் பூங்காவிலிருந்து காந்தி சாகர் வன விலங்குச் சரணாலயத்திற்கு சில சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்வதற்கு சிவிங்கிப் புலிகள் திட்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • வேளாண்மை தொடர்பான 3வது BIMSTEC அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்றது.
  • ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகள் பட்டியலில், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் ஒரு சிறந்த விமான நிலையமாக இடம் பெற்றுள்ளது.
  • பீகார் மாநில முதல்வர் பாட்னாவில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான அதிகாரப் பூர்வ உருவச் சின்னம் மற்றும் அதன் முத்திரையினை வெளியிட்டார்.
    • அந்த உருவச் சின்னம் ஆனது, யானையின் ஆற்றலையும் சிங்கத்தின் இதயத்தையும் குறிக்கும் "கஜ்சிம்ஹா" ஆகும்.
  • சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியுடன் (ISA) உலக நாடுகள் கூட்டுக் கட்டமைப்பில் (CPF) கையெழுத்திட்ட முதல் ஆப்பிரிக்க நாடாக மொரிஷியஸ் மாறியுள்ளது.
    • வங்காளதேசம், பூடான் மற்றும் கியூபாவிற்குப் பிறகு, இந்தக் கட்டமைப்பை அதிகாரப் பூர்வமாக்கிய நான்காவது நாடு இந்தத் தீவு நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்