பேஸ்புக் நிறுவனமானது தனது சமூக தலைமைத்துவ திட்டத்தின் ஒரு பகுதியாக $1 மில்லியன் பரிசுக்காக 5 உலக தலைவர்களிடையே அதுனிகா பிரகாஷ், சேதனா மிஸ்ரா மற்றும் தமன்னா தமீஜா ஆகிய மூன்று இந்தியப் பெண்களை தேர்வு செய்துள்ளது.
வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, சண்டிகர் ஆகியன எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலிய பொருட்களின் மீது ஒரே விதமான வரி விகிதங்களை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
இது தவிர இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மதுபானம், வாகனப் பதிவுகள் மற்றும் போக்குவரத்து அனுமதிச் சீட்டு ஆகியவற்றிற்கும் ஒரே விதமான வரியை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், காசநோய் அபாயங்களுக்கெதிராக போராடுவதற்காக பொது மற்றும் தனியார் துறையின் முன்னணி நிபுணர்களை உள்ளடக்கிய “USAID - India End TB” என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB – Asian Development Bank) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் முதல் பல்திறனுடைய பூங்காவை அமைப்பதற்காக 150 மில்லியன் டாலரை கடனாக வழங்கவுள்ளது.
இந்த புதிய முதன்மையான உலகளாவிய திறன்பூங்கா வளாகமானது மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் நகரத்தில் நிறுவப்படும்.
மத்திய அரசானது மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு (SDRF – State Disaster Responsive Force) இதுவரை அளித்து வந்த நிதியை 75%லிருந்து 90% ஆக உயர்த்தியுள்ளது. இனி SDRF க்கு மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகவும் மீதமுள்ள 10% அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.
நிதி ஆயோக்கும் ஐ.நா. சபையும் இந்தியாவில் 2018-2022 என்ற காலகட்டத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பில் (Sustainabale Development Framework) கையெழுத்திட்டுள்ளன. இந்த கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் ஐ.நா. சபை சார்பாக இந்தியாவின் தேசிய எதிரினை (National Counterpart) என்பது நிதி ஆயோக் ஆகும்.