தமிழக முதலமைச்சர் சிஃபி இன்பைனைட் ஸ்பேசஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான தென்னிந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு வகையில் தயார் நிலையிலான தரவு மைய வளாகத்தினைச் சிறுசேரியில் திறந்து வைத்துள்ளார்.
சென்னையின் தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (NIOT) உள்ள இந்தியாவின் ஒரே கடலடி ஒலியியல் சோதனை மையம் (ATF) ஆனது, பாரிசில் உள்ள சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகள் வாரியத்தின் (BIPM) கீழ் கடலடி ஒலியியல் துறைக்கான இந்தியாவின் "நியமிக்கப்பட்ட ஆய்வகமாக" அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 'குருதிக் குழாய் சீரமைப்பு முறையின் தந்தை' என்று அங்கீகரிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் மேத்யூ சாமுவேல் கலரிக்கல் சமீபத்தில் காலமானார்.
கோயம்புத்தூரில் உள்ள அமிர்த வித்யாலயம் ஆனது அந்தப் பள்ளியின் 25வது ஆண்டு கல்வி சேவையைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு அமிர்த வித்யாலயம் உலக சாதனை விழாவில் 27 உலக சாதனைகளைப் படைத்து உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆனது ஆளுகை தொடர்பான சர்வதேசக் காவல்துறைக் குழுவின் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதாரத் தினத்தன்று (ஏப்ரல் 07) மகப்பேறு கால மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த ஓராண்டு காலப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிரா அரசானது, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்து உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான குல்தாபாத்தை 'ரத்னாபூர்' என்று மறு பெயர் இடவுள்ளது.