தமிழக அரசானது புவிசார் குறியீடுகள் (GI) பெறுவதற்கென்று விண்ணப்பிப்பதற்கான மானியத்தினை 25,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் தென்னிந்தியாவின் முதல் குளிர் சாதன மின்சாரத் தொடர்வண்டி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசானது, இந்தியாவில் IBCA அமைப்பின் தலைமையகம் மற்றும் அதற்கான செயலகத்தினை நிறுவுவதற்காக சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியுடன் (IBCA) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநில வனவிலங்கு வாரியம் ஆனது, DPS ஃபிளமிங்கோ ஏரியை ஒரு வளங்காப்பகமாக அறிவிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி முன்னெடுப்பின் கீழ் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான போர் வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்குவதற்காக என தங்கள் முதல் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியினை நியூயார்க் நகரில் டாக்டர் B.R. அம்பேத்கர் தினமாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசிய நாட்டின் கிழக்கு நுசா தெங்காரா என்ற மாகாணத்தில் அமைந்துள்ள லெவோடோபி எரிமலை சமீபத்தில் வெடித்தது.
தேசிய நீர் மின்னாற்றல் கழக தனியார் நிறுவனம் (NHPC) ஆனது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பர்பதி-II நீர்மின் நிலையத்தின் 2 ஆம் அலகின் (200 மெகாவாட்) சோதனை உற்பத்தியினை நிறைவு செய்துள்ளது.
இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியாளர்களின் போட்டித் தன்மையை மிக நன்கு அதிகரிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டின் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் கொள்கையைத் திருத்தியமைத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, உள்ளகப் பூஞ்சை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் கண்டறியும் கருவிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலான தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பதோடு இது இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான மிகப் புதுமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் (R&D) அவசரத் தேவையைக் குறிப்பிடுகிறது.
அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) 'சிறந்த சண்டைக் காட்சி வடிவமைப்பு‘ என்ற புதிய விருது வகையை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது என்பதோடு மேலும் இந்த விருதானது 2027 ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ள 100வது அகாடமி விருதுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கப் படைகளானது பனாமா கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் அதன் படைகளை நிலை நிறுத்த அனுமதிக்கப்படவுள்ளது.