இந்தியக் கடற்படையானது ‘ஓஜாஸ்’ எனப்படுகின்ற சுமார் 25 டன் இழுவைத் திறன் கொண்ட (பொல்லார்ட் புல்-BP) ஐந்தாவது இழுவைப் படகினைக் கொல்கத்தாவில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்டா நிறுவனமானது, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் போன்ற சில சேவைகளில் மெட்டா AI திறன்களை மேம்படுத்துவதற்காக லாமா 4 எனும் அதன் புதிய தொடரினை அறிமுகப்படுத்தியுள்ளது.
Next ’25 எனும் மாநாட்டில், கூகுள் நிறுவனம் இதுவரையில் உருவாக்கிய மிகவும் திறன் வாய்ந்த, மிகைப்படுத்தப்பட்ட மற்றும் பெரும் மிகை ஆற்றல் பயன்திறன் கொண்ட அயர்ன்வுட் எனப்படும் இயந்திரக் கற்றலின் பல்வேறு செயல்பாடுகளை மிகவும் நன்கு வேகப்படுத்துவதற்கான ஒரு அலகினை (Tensor Processing Unit - TPU) அறிமுகப்படுத்தி உள்ளது.