இந்திய இராணுவமானது, வடக்கு வங்காளத்தின் அடர்ந்த காடுகளிலிருந்து சிக்கிமின் பனிப் படர்ந்த சிகரங்கள் வரையிலான ஒரு பயணத்தை உள்ளடக்கிய மிக உயரமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ARMEX-24 எனப்படும் சாகசப் பயணத்தினை நிறைவு செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராகத் திட்டமிடப்பட்டுள்ள அமராவதியானது, முழுமையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் இயங்குகின்ற உலகின் முதல் நகரமாக கட்டமைக்கப்பட்டு ஒரு புதிய வரலாற்றினை படைக்க உள்ளது.
இந்திய விமானப் படையானது ஐக்கிய அரபு அமீரகத்தினால் நடத்தப் படும் டெசர்ட் பிளாக்-10 பயிற்சியில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரான்சு, ஜெர்மனி, கத்தார், சவுதி அரேபியா, கொரியக் குடியரசு, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுடன் இணைந்து பங்கேற்கிறது.
மொராக்கோவில் நடைபெற்ற GITEX ஆப்பிரிக்கா 2025 எனப்படும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரியத் தொழில்நுட்ப மற்றும் புத்தொழில் நிகழ்ச்சியில் இந்தியா பங்கேற்றது.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்னகி இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 9வது உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடானது (GTS) புது டெல்லியில் நடைபெற்றது.
காசாவில் இஸ்ரேலியத் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும் போது மிகவும் பலத்த காயமடைந்த ஒரு சிறுவனைச் சித்தரிக்கும் மனதை உருக்கும் புகைப்படத்திற்காக, தோஹாவைச் சேர்ந்த பாலஸ்தீன நாட்டின் புகைப்படக் கலைஞர் சமர் அபு எலூஃப் என்பவருக்கு 2025 ஆம் ஆண்டின் சிறந்த உலகப் பத்திரிகை புகைப்பட விருது வழங்கப் பட்டு உள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) உதவியுடன் இந்திய மாதுளைகள் மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிற்கு வணிக ரீதியாக கடல் வழியாக மிகவும் முதன் முறையாக ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
ஐதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்றப் பாரம்பரியக் கலைக் கல்லூரி கட்டிடம் ஆனது இந்திய நாட்டு அரசாங்கத்தின் வர்த்தக முத்திரை பதிவேட்டில் அதன் முகப்பு வர்த்தக முத்திரையைப் பதிவு செய்த நாட்டின் மூன்றாவது கட்டிடமாகும்.
இந்தியாவில் ஏற்கனவே வர்த்தக முத்திரை பெற்ற இரண்டு கட்டிடங்கள் என்பவை - தாஜ் மஹால் பேலஸ் தங்கும் விடுதி மற்றும் மும்பையில் உள்ள மும்பைப் பங்குச் சந்தை கட்டிடம் ஆகியனவாகும்.