தமிழ்நாடு முதலமைச்சர், அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் V. சாந்தாவின் சிலையைத் திறந்து வைத்து, சென்னையில் உள்ள அடையாரில் உள்ள அந்த நிறுவனத்தின் வளாகத்தில் அவருக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்ட ஒரு நினைவு அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மாநிலத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) ஆனது, குறைக்கடத்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் உள்ள தொழில்துறைகளுக்காக என்று கோயம்புத்தூரில் 350 ஏக்கர் பரப்பில் தொழில்துறைப் பூங்காவை அமைக்க உள்ளது.
தமிழக மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2024 மற்றும் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் (உரிமம்) திருத்தச் சட்டம், 2024 ஆகிய இரண்டு மசோதாக்களும் தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதையடுத்து தமிழ்நாடு மாநில அரசானது இந்த இரண்டு சட்டங்களையும் மாநில அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசானது, தர்மபுரியில் உள்ள பென்னாகரத்தில் விளையும் ஒரு புளி வகைக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 05 ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டில் தமிழ் வாரம் கொண்டாடப்படும்.
ஒரு நாளைக்கு சுமார் 10,000 பயணிகளின் போக்குவரத்தினைக் கையாளும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியதொரு பயணியர் கப்பல் முனையமான மும்பை சர்வதேச பயணியர் கப்பல் முனையம் (MICT) சமீபத்தில் திறக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் நதாடோப்பின் உயரமான மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது "இமயமலை அதி உயர் மட்ட வளிமண்டல மற்றும் பருவநிலை ஆராய்ச்சி மையம்" தற்போது திறக்கப்பட்டுள்ளது.
பயிர்ச் சாகுபடி முன்னேற்றம் குறித்த விரிவான தொலை உணர்திறன் கண்காணிப்பு (CROP) என்பது இஸ்ரோவின் தேசிய தொலை உணர்திறன் மையத்தினால் (NRSC) உருவாக்கப்ப ட்ட ஒரு பகுதியளவு மற்றும் மேம்படுத்தக்கூடியக் கட்டமைப்பாகும்.
இது இந்தியா முழுவதும் ராபிப் பருவத்தில் பயிர் விதைப்பு மற்றும் அறுவடையை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.