இந்திய விமானப்படையானது, "ஆக்ரமன்" எனப்படும் ஒரு பெரிய அளவிலான போர்ப் பயிற்சியினை நடத்தியதோடு இது மலைப் பகுதி மற்றும் தரைப்பகுதி சார்ந்த நிலப் பரப்புகளில் தாக்குதல் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மதிப்புமிக்க 2024 ஆம் ஆண்டு லதா தீனநாத் மங்கேஷ்கர் விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிகளில் 2014-15 ஆம் ஆண்டில் 18 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குப் போக்குவரத்தானது, 2024-25 ஆம் ஆண்டில் 145 மில்லியன் டன்களுக்கு மேல் பதிவாகியுள்ளதுடன் இந்தியா புதியச் சாதனையினைப் படைத்து உள்ளது.
2024-25 ஆம் ஆண்டு கொள்முதல் ஆண்டில் துவரை, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை மாநிலத்தின் முழு உற்பத்திக்கும் சமமான விலை ஆதரவுத் திட்டத்தின் (PSS) கீழ் கொள்முதல் செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
புனேவில் உள்ள இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) மற்றும் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (SRFTI) ஆகியவை கல்வி அமைச்சகத்தினால், தனித்துவமானப் பிரிவின் கீழ் நிகர்நிலை பல்கலைக் கழகங்களாகக் கருதப்படும் நிறுவனங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
நாசாவில் பணியாற்றும் ஒரு மூத்த விண்வெளி வீரரான டான் பெட்டிட் (70), சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 220 நாட்களுக்கு மேல் தங்கி தற்போது பூமிக்குத் திரும்பி உள்ளார்.
KIIT மற்றும் KISS ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் அச்சுயுத சமந்தாவிற்கு 2025 ஆம் ஆண்டின் குருதேவ் காளிச்சரன் பிரம்மா விருது வழங்கப்பட்டுள்ளது.