TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2025 13 hrs 0 min 14 0
  • ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதம் ஆகியவற்றில் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது விரைவில் 'திறன்' என்ற முன்னெடுப்பினை அமல்படுத்தவுள்ளது.
  • இந்தியத் தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) புவனேஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
  • சீனாவின் 10வது ஆண்டு விண்வெளி தினத்தை முன்னிட்டு, டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ஷென்சோ-20 ஏவுகலத் திட்டத்தினை சீனா தொடங்கியுள்ளது.
  • 2,100 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதான் மந்திரி மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியம் மற்றும் ஆடை (PM MITRA) பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு மத்தியப் பிரதேசம் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது.
    • இந்தியாவின் இம்மாதிரியான முதலாவது பூங்காவாக இது கருதப் படுகிறது.
  • சத்தீஸ்கரின் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையானது தனது முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என்ற நிலையில் இது சிறுநீரக இணை மாற்று அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.
  • கோஸ்டாரிகன் தேசிய அவசர ஆணையம் (CNE) ஆனது, போவாஸ் எரிமலை தேசியப் பூங்கா பகுதியில் வெடிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அபாய (சிவப்பு) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • பிரான்சு அரசினால் நடத்தப்பட்ட வளர்ச்சிக்கான ஊட்டச்சத்து (N4G) உச்சி மாநாட்டில், 8 முக்கிய துறைகளில் 13 இலட்சிய மிகு உறுதிப்பாடுகளை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மீது விதிக்கப்படும் 18% சரக்கு மற்றும் சேவை வரியினை தமிழ்நாடு மாநில அரசே செலுத்த உள்ளது.
    • இத்திட்டத்திற்கு நாட்டிலேயே தமிழ்நாட்டில் அதிக நிதியானது ஒதுக்கீடு செய்யப் படுவதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் ஆண்டிற்கு என்று 3 கோடி ரூபாய் வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்