TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 30 , 2018 2120 days 635 0
  • பேஸ்புக் நிறுவனமானது தனது சமூக தலைமைத்துவ திட்டத்தின் ஒரு பகுதியாக $1 மில்லியன் பரிசுக்காக 5 உலக தலைவர்களிடையே அதுனிகா பிரகாஷ், சேதனா மிஸ்ரா மற்றும் தமன்னா தமீஜா ஆகிய மூன்று இந்தியப் பெண்களை தேர்வு செய்துள்ளது.
  • வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, சண்டிகர் ஆகியன எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோலிய பொருட்களின் மீது ஒரே விதமான வரி விகிதங்களை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
    • இது தவிர இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மதுபானம், வாகனப் பதிவுகள் மற்றும் போக்குவரத்து அனுமதிச் சீட்டு ஆகியவற்றிற்கும் ஒரே விதமான வரியை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
  • அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், காசநோய் அபாயங்களுக்கெதிராக போராடுவதற்காக பொது மற்றும் தனியார் துறையின் முன்னணி நிபுணர்களை உள்ளடக்கிய “USAID - India End TB” என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன.
  • ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB – Asian Development Bank) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் முதல் பல்திறனுடைய பூங்காவை அமைப்பதற்காக 150 மில்லியன் டாலரை கடனாக வழங்கவுள்ளது.
    • இந்த புதிய முதன்மையான உலகளாவிய திறன்பூங்கா வளாகமானது மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் நகரத்தில் நிறுவப்படும்.
  • மத்திய அரசானது மாநில பேரிடர் மேலாண்மை நிதிக்கு (SDRF – State Disaster Responsive Force) இதுவரை அளித்து வந்த நிதியை 75%லிருந்து 90% ஆக உயர்த்தியுள்ளது. இனி SDRF க்கு மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகவும் மீதமுள்ள 10% அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.
  • நிதி ஆயோக்கும் ஐ.நா. சபையும் இந்தியாவில் 2018-2022 என்ற காலகட்டத்திற்கான நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பில் (Sustainabale Development Framework) கையெழுத்திட்டுள்ளன. இந்த கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு இந்தியாவில் ஐ.நா. சபை சார்பாக இந்தியாவின் தேசிய எதிரினை (National Counterpart) என்பது நிதி ஆயோக் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்