TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2018 2119 days 613 0
  • தற்போது நமீபியாவிற்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றும் குமார் டுஹின் (IFS:1991) அவர்கள் ஹங்கேரி குடியரசிற்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போது மியான்மருக்கான இந்திய தூதுவராக பணியாற்றும் விக்ரம் மிஸ்ரி (IFS:1989) அவர்கள் சீனாவிற்கான அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதுடெல்லியின் விக்யான் பவனில் எழுச்சிக்கான கல்வியில் அறிவார்ந்த தலைமைத்துவம் என்ற மாநாட்டை பிரதமர் துவங்கி வைத்தார்.
  • அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவுள்ள டெல்லி பாதி மாரத்தான் போட்டிக்கான நிகழ்ச்சி தூதுவராக 4 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் சான்யா ரிச்சர்ட்ஸ் - ரோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மலிவானப் போக்குவரத்தை நோக்கிய நிலையான மாற்று வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகமானது மலிவானப் போக்குவரத்தை நோக்கிய நீடித்த மாற்று வழி (Sustainable Alternative Towards Affordable Transportation-SATAT) என்ற முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
    • இந்த முன்முயற்சியானது பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் (IOC, BPCL & HPCL) தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்