TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2018 2248 days 667 0
  • 2018 செப்டம்பர் 24-ம் தேதி சிக்கிமின் முதல் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த விமான நிலையமானது இந்தியாவின் 100வது செயல்பாட்டு விமான நிலையமாகும். சிக்கிம் மட்டுமே இதுவரை செயல்பாட்டு விமான நிலையமல்லாத ஒரே மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • உச்ச நீதிமன்றமானது, ஒரே நேரத்தில் வழக்கறிஞர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் (MP/MLA) ஆகிய இரண்டு பணிகளை வகிப்பதை அனுமதிக்கக் கூடாது என தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் MP/MLA-க்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதை கட்டுப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பளித்தது.
  • மலேசியாவிலிருந்து M.V. அரேலியா என்ற சரக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட 56,750 மெட்ரிக் டன் மணலை 48 மணி நேரத்திற்குள் இறக்கி சென்னை காமராஜர் துறைமுகமானது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
  • கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
  • ஜம்மு மாவட்டத்தில் 9 மாதங்கள் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை-மணல்வாரி தடுப்பூசிப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரமானது இந்தியாவில் முதல்முறையாக குழந்தைப் பருவ நோய்த்தடுப்பு திட்டத்தில் மணல்வாரி தடுப்பூசியானது அறிமுகம் செய்யப்பட்டதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்