நீலகிரி காவல் துறையானது பாரம்பரிய ‘குரும்பா’ ஓவியத்தை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. காவல்துறையானது அழிந்துவரும் கலை வடிவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கேரள-தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் எல்லைப்பகுதி கிராமங்களை தத்தெடுக்க உள்ளது.
ஹரியானா அரசானது, சூரியசக்தி துறையில் அறிவியலாளர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க இந்தியாவில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையின் பெயரில் கல்பனா சாவ்லா ஹரியானா சோலார் விருது என்ற விருதினை உருவாக்க முடிவு செய்துள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI – Telecom Regulatory Authority of India) இந்திய டிஜிட்டல் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என பெயர் மாற்றப்படவுள்ளது.
தமிழ்நாட்டின் ஏழு மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆறு முதன்மை சுகாதார மருத்துவ மையங்கள் மாநில சுகாதார சேவைகளின் மேன்மைக்கான மையத்திலிருந்து தரத்திற்கான தேசிய உத்திரவாத விருதினைப் பெற்றுள்ளன.
உத்திரப் பிரதேச மாநிலம் ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவகமான லால் பகதூர் சாஸ்திரி ஸ்மிரிதி பவன் சங்ரஹாலேவை மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன (FTII - Film and Television Institute of India) சங்கத்தை உருவாக்கியுள்ளது. மேலும் நடிகை கங்கனா ரனவத், பாடகர் அனுப் ஜலோதா, பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களான ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா ஆகியோரை மற்ற உறுப்பினர்களுடன் நியமனம் செய்துள்ளது.
இந்த நியமனமானது FTII-ன் தலைவராக நடிகர் அனுபம் கெர் நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு வந்துள்ளது.
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் இந்தியப் பழங்குடிகள் மற்றும் ட்ரைஃபெட் (Tribes India and TRIFED) அமைப்பானது ‘பஞ்ச் தந்திரா சேகரிப்பை’ (Punch Tantra Collection) தொடங்கியுள்ளது. மேலும் இந்திய பழங்குடியினரின் விளம்பரத் தூதுவராக மேரி கோம்-ஐ அது நியமித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 4 நாள் தேசிய இலக்கிய மற்றும் அறிவுசார்ந்த மாநாடான ‘லோக் மன்தன் 2018’ ஆனது (Lok Manthan 2018) துணைக் குடியரசு தலைவர் M. வெங்கையா நாயுடுவால் தொடங்கி வைக்கப்பட்டது.
வரும் 2024-ல் நடக்கவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான பந்தயத்தில் ஒரே ஒரு மாற்று ஏலக்காரரான துருக்கியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் 2006 உலக கோப்பைப் போட்டியை ஜெர்மனி கடைசியாக நடத்தியது.