அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சென்னை விமான நிலையத்தில் எந்தத் திசையிலிருந்தும் விமானங்களானது எளிதில் ஓடு பாதையை அணுகவும் தரையிறக்கத்தை எளிதாக்கவும் உதவக்கூடிய ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான GBAS என்ற அமைப்பை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் (AAI – Airports Authority of India) திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான அர்பன் ட்ரீ (Urban tree) என்ற அமைப்பானது அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக ஸ்வச் சென்னை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் அலுவலக இல்லமான ராஜ் நிவாஸ்க்கு 10,000வது வருகையாளராக லைப் ஆப் பை திரைப்படத்தின் நடிகர் அடில் ஹூசைன் ஆகியுள்ளார். இவர் பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழாவின் அறிவுரையாளர் மற்றும் விளம்பரத் தூதுவர் ஆவார்.
யூனியன் பிரதேசத்தின் பாரம்பரிய கட்டிடமான ராஜ் நிவாஸ் 2017, மே 1 முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டது.