உலக பொருளாதார மன்றத்தால் (WEF - World Economic Forum) சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவில் எதிர்கால வேலை’ என்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிக வளரச்சியை எதிர்நோக்கும் நிறுவனங்களானது வருங்காலத்தில் பெண்களை விட ஆண்களை பணியமர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிகிறது.
இந்த அறிக்கையானது WEF மற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) மூலம் தயாரிக்கப்பட்டது.
புவனேஸ்வரில் நடைபெற்ற 58வது தேசிய ஓபன் தடகள சாம்பயின்ஷிப் போட்டிகளின் ஆண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் பந்தயத்தில் அவினாஷ் சபில் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். 1981 ஆம் ஆண்டில் கோபால் சைனியின் சாதனையை இவர் முறியடித்தார்.
நாட்டின் அச்சு தொழில் நுட்பத்தின் உச்ச அமைப்பான ‘இந்திய செய்தித்தாள் சங்கத்தின்’ (Indian Newspaper Society) தலைவராக மலையாள மனோரமாவின் நிர்வாக ஆசிரியரான ஜெயந்த் மம்மென் மேத்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் பிசினஸ் ஸ்டான்டார்டு நிறுவனத்தின் அகிலா உரங்கர்-ஐ அடுத்து பதவியேற்றுள்ளார்.