TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 6 , 2017 2575 days 943 0
  • ஐ. நா-வின் சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய உயிர்மூச்சு (Breathe life) பிரச்சாரத்தின் இலக்குகளை முன்னெடுத்து காட்டவும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்கும் ஐ.நா. சுற்றுச்சூழலின் தூய காற்றுக்கான புரவலராக [UN Environment’s ‘Patron for Clean Air’] Paytm நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உத்திர பிரதேச மாநிலத்தின் ஷாம்லி மாவட்டம் தேசிய தலைநகர் பகுதியுடன் [NCR – National Capital Region] இணைக்கப்பட்டுள்ளது. NCR-ல் இணைக்கப்படும் 23-வது மாவட்டம் இதுவாகும். டெல்லி NCR ஆனது ஹரியானாவின் 13 மாவட்டங்களையும், எட்டு உத்திரப்பிரதேச மாவட்டங்களையும், இராஜஸ்தானின் இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியப் பகுதியாகும். மாநிலங்களுக்கிடையேயான பிராந்திய திட்டப்பகுதியாக 1985-ல் NCR அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்