ஜெய்ப்பூரில் இந்தியப் பொலிவுறு நகரங்களுக்கான கண்காட்சியை (Smart City Expo India) துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு துவக்கி வைத்தார்.
மத்திய அரசு இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர்கள் ஏற்படும்போது வருவாய் திரட்டும் மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைக் குழுவை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுக்கீசிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் கோவா பொதுப்பணித் துறையும் இணைந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன.
அக்டோபர் 6 முதல் 18 ஆம் தேதி வரை பியுனஸ் அயர்ஸில் நடைபெற உள்ள 3வது இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக கொடியைத் தாங்கிச் செல்லும் வீரராக இளம் துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசியத் தூய்மை கங்கைத் திட்டமானது (NMCG - National Mission for Clean Group) டாடா எஃகு சாகச மன்றத்துடன் இணைந்து 1 மாத கால படகுப் பயணத்தைத் தொடங்கியது. இந்தப் படகுப் பயணமானது எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இந்தியப் பெண்மணியான பச்சேந்த்ரி பால் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தப் பயணமானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ல் ஹரித்துவாரில் தொடங்கி பீகாரின் பாட்னாவில் நிறைவடையவிருக்கிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 36வது தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ராகேஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.