நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG - Sustainable Development Goals) இந்தியாவின் முதலாவது ஐக்கிய நாடுகளின் இளம் வணிக சாம்பியனாக கிர்லோஸ்கர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான மானாசி கிர்லோஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய “வண்ணத்துப்பூச்சி” என்று இந்தியில் பொருள் கொண்ட “டிட்லி“ புயல் “மிகவும் கடுமையான சூறாவளிப் புயல்“ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான “2 + 2” செயலாளர் நிலையிலான பேச்சுவார்த்தையின் 2-வது பதிப்பு கான்பெராவில் நடைபெற்றது.
புது தில்லியில் 29 வது கணக்குத் தணிக்கையாளர் மாநாடு (Accountant General Conference) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஆல் தொடங்கி வைக்கப்பட்டது. இரு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கானது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் (Comptroller and Auditor General of India) ஒருங்கிணைக்கப்பட்டது.