TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 15 , 2018 2105 days 653 0
  • டெல்லி அரசாங்கமானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கிட மாஸ்கோ அரசாங்கத்துடன் இரட்டை நகர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • பிராந்தியப் பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (Regional Comprehensive Economic Partnership - RCEP) 6வது பிராந்தியங்களுக்கிடையேயான அமைச்சரவை நிலையிலான சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது டாக்டர் சேகர் மண்டே-வை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR - Council of Scientific and Industrial Research) பொது இயக்குநர் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் செயலாளராக (DSIR - Department of Scientific and Research) நியமித்துள்ளது.
    • 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இப்பதவி வகித்த கிரிஷ் சஹினி வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றதையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெருநகர நொய்டாவின் இந்திய கண்காட்சி மற்றும் சந்தையில் உலகின் மிகப்பெரிய ஐஎச்ஜிஎப்-தில்லி கண்காட்சியின் 46வது பதிப்பு நடைபெற்றது. ஐஎச்ஜிஎப் (IHGF) கண்காட்சியானது கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி ஊக்கமளிப்பு ஆணையத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
  • மத்திய தகவல் ஆணையத்தின் (CIC - Central Information Commission) 13வது மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இம்மாநாடு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த்-ஆல் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மீதான நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ளன. இது புது தில்லியில் நடைபெற்ற இந்திய-அசர்பைஜான் நாடுகளுக்கிடையேயான ஆணையத்தின் 5வது சந்திப்பின்போது கையெழுத்திடப்பட்டது.
  • இந்தியப் பிரதமர், விவசாயத் தலைவரான சர் சோட்டு ராம் என்பவரின் 64 மீ உயரம் கொண்ட உருவச் சிலையை ஹரியானாவின் ரோத்தாக் மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான சம்பலா கிராமத்தில் திறந்து வைத்தார். இச்சிலை புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவரான ராம் வன்ஜி சுதர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியானது (OED - Oxford English Dictionary) ‘Idiocracy’ என்ற சொல்லை அதிகாரப்பூர்வமாக அதனுள் இணைத்தது. OED-ன் சமீபத்திய புதுப்பித்தலில் சேர்க்கப்பட்ட 1400 புதிய வார்த்தைகள், இயலுணர்வுகள் மற்றும் சொற்றொடர் ஆகியவற்றில் இதுவும் ஒன்றாகும். மேலும் OED ஆனது ‘trapo’ என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளது.
    • Idiocracy - சமூகமானது முட்டாள்கள் என்று கருதப்பட்ட மக்கள் அல்லது அறிவற்ற, ஒதுக்கப்பட்ட/மூடத்தனமாக என்று கருதப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டது அல்லது நிர்வகிக்கப்படுகிறது.
    • Trapo - வழக்கமான மற்றும் ஊழல் நிறைந்த ஆளும் வர்க்கம் சார்ந்ததாக உணரப்பட்ட அரசியல்வாதிகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்