இங்கிலாந்து அரசால் இந்த ஆண்டில் உலகின் முதல் தனிமைக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரேசே குரோச், தனிமைப்படுத்தும் கொடுமையை எதிர்த்து தனது முதல் தனிமை-எதிர்ப்பு மூலோபாயத்தை தொடங்கவுள்ளார்.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிமேஷ் ஷா, இந்தியாவின் பரஸ்பர நிதியகங்களின் சங்கத்தின் (Association of Mutual Funds in India -AMFI) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆதித்யா பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பாலசுப்பிரமணியனுக்குப் பதிலாக பதவியேற்றுள்ளார்.
இந்திய கட்டிடத் துறையில் புதுமையான அமைப்புகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்த அனுமோலு ராமகிருஷ்ணாவின் சுயசரிதையான ‘பில்டிங் எ லெகஸி’ (Building a Legacy) எனும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.
இப்புத்தகமானது பட்டயக் கணக்கரான V. பட்டாபி ராம் என்பவரால் எழுதப்பட்டது.
உத்திரப்பிரதேச அமைச்சரவையானது வரலாற்று சிறப்பு மிக்க நகரமான அலகாபாத்தை பிரயாக்ராஜ் என மறுபெயரிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதுப்பெயரானது மாநிலத்தில் பாயும் 3 நதிகள் சந்திக்குமிடமான பிரயாக் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
டொமினிகன் குடியரசில் நடைபெற்ற சாண்டோ டோமிங்கோ ஓபன் கோப்பையை இந்தோ-மெக்சிகன் ஜோடியான லியாண்டர் பயஸ் மற்றும் மிகுவேல் ஏஞ்சல் ரேய்ஸ்-வரேலா ஜோடி வென்றுள்ளது.