TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 17 , 2018 2234 days 666 0
  • இங்கிலாந்து அரசால் இந்த ஆண்டில் உலகின் முதல் தனிமைக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ட்ரேசே குரோச், தனிமைப்படுத்தும் கொடுமையை எதிர்த்து தனது முதல் தனிமை-எதிர்ப்பு மூலோபாயத்தை தொடங்கவுள்ளார்.
  • ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நிமேஷ் ஷா, இந்தியாவின் பரஸ்பர நிதியகங்களின் சங்கத்தின் (Association of Mutual Funds in India -AMFI) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆதித்யா பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பாலசுப்பிரமணியனுக்குப் பதிலாக பதவியேற்றுள்ளார்.
  • இந்திய கட்டிடத் துறையில் புதுமையான அமைப்புகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்த அனுமோலு ராமகிருஷ்ணாவின் சுயசரிதையான ‘பில்டிங் எ லெகஸி’ (Building a Legacy) எனும் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.
    • இப்புத்தகமானது பட்டயக் கணக்கரான V. பட்டாபி ராம் என்பவரால் எழுதப்பட்டது.
  • உத்திரப்பிரதேச அமைச்சரவையானது வரலாற்று சிறப்பு மிக்க நகரமான அலகாபாத்தை பிரயாக்ராஜ் என மறுபெயரிட ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதுப்பெயரானது மாநிலத்தில் பாயும் 3 நதிகள் சந்திக்குமிடமான பிரயாக் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
  • டொமினிகன் குடியரசில் நடைபெற்ற சாண்டோ டோமிங்கோ ஓபன் கோப்பையை இந்தோ-மெக்சிகன் ஜோடியான லியாண்டர் பயஸ் மற்றும் மிகுவேல் ஏஞ்சல் ரேய்ஸ்-வரேலா ஜோடி வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்