TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 19 , 2018 2232 days 668 0
  • சமூக தொழில் முனைவரான சுஹைல் F. தாண்டன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சமூக செயற்சங்க குழுவின் கிராண்ட் விருதினை தனது விளையாட்டு அபிவிருத்திற்கான பங்களிப்பிற்காக வென்றுள்ளார்.
    • இவர் ப்ரோ ஸ்போர்ட் டெவலப்மெண்ட் (PSD - Pro Sport Development) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மார்த்தா ஃபரேல் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
  • நோக்கியாவின் சென்னை ஆலையில் அதிக திறன் வாய்ந்த செயல்பாட்டுத் திறனை செயல்படுத்துவதற்காக 4G LTE தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மற்றும் ஆலையை 5G சகாப்தத்திற்காக ஸ்மார்ட் தயாரிப்புடன் உருவாக்குவதற்காகவும் நோக்கியாவும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட்டிணைவதாக அறிவித்துள்ளன.
  • துப்புரவு, குடிநீர், சுகாதாரம், குழந்தைகள் நலம், மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக நீலகிரி மாவட்டமானது JRD டாடா நினைவு விருதைப் பெற்றுள்ளது.
    • இந்த விருதானது 1997 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கவுரவிப்பதற்காக இந்திய மக்கள் தொகை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரான நாரயண் தத் திவாரி தனது 93வது வயதில் புது டெல்லியில் காலமானார். இரண்டு மாநிலங்களில் முதல்வராக பணியாற்றிய ஒரே அரசியல்வாதி இவரேயாவார்.
    • இவர் உத்திரப் பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராகவும் உத்தரகண்ட் மாநிலத்தின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகவும் இருந்தவராவார். இவரது பிறந்த தேதியும் இறந்த தேதியும் ஒன்றாகும்.
  • ‘பிராக்ரிதி’ திட்டத்தைத் துவங்குவதற்காக இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியல் மன்றமானது (ICFRE - Indian Council of Forestry Research and Education) கேந்திரிய வித்யாலா சங்கதன் (KVS - Kendriya Vidyalaya Sangathan) மற்றும் நவோதயா வித்யாலா சமிதி (NVS - Navodaya Vidyalaya Samiti) ஆகியோருடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
    • இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 10 ஆண்டு காலத்திற்கு கையெழுத்தாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்