TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 24 , 2018 2227 days 659 0
  • பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சுதா என்ற மாணவி உருவாக்கிய ரெளத்திரம் எனும் கைபேசி செயலியை நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் துவக்கி வைத்தார். இது அவசர காலங்களில் பெண்களுக்கு உதவியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு முதல் நடத்திய புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் நேர்காணல்களின் தொகுப்பை புத்தகமாக “இந்திய விளையாட்டுக்கள்: உரையாடல்கள் மற்றும் பிரதிபலிப்புகள்” என்ற பெயரில் மூத்த விமர்சகர் மற்றும் கிரிக்கெட் புள்ளியியலாளரான விஜயன் பாலா வெளியிட்டுள்ளார்.
  • இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை இருதரப்பு விமானப்படை பயிற்சியான 'கோப் இந்தியா” என்ற பயிற்சியை முத்தரப்பு வடிவத்திற்கு மாற்றுவதற்காக முனைந்துள்ளன. ஏற்கனவே மூன்று நாடுகளும் விரிவுபடுத்தப்பட்ட மலபார் கடற்படை போர்ப்பயிற்சியின் கீழ் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
  • Paytm நிறுவனமானது சாப்ட் பேங்க் கார்ப்பரேஷன் மற்றும் யாஹூ ஜப்பான் கார்ப்பரேஷன் உடன் இணைந்த கூட்டு முயற்சியாக பேபே (PayPay) என்ற QR குறியீட்டு அடிப்படையிலான திறன்பேசி பணவழங்கீடு சேவையை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்த தொடக்கத்தின் மூலம், யாஹூ ஜப்பான் ஆனது தனது தற்போதைய திறன்பேசி தீர்வு செயல்பாடான யாஹூ பணப்பை (Wallet) சேவையை நிறுத்துகிறது.
  • தி ஹிந்து வெளியீட்டாளர் குழுமத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள், ஒருமனதாக சுரேஷ் நம்பாத்தை தி ஹிந்துவின் பதிப்பாசிரியராக நியமித்துள்ளனர், இது மார்ச் மாதம் 1, 2019 முதல் அமலுக்கு வரவுள்ளது. இவர் முகுந்த் பத்மநாபனுக்கு அடுத்து பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்