TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2018 2095 days 587 0
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL - Reliance Industries Ltd) ஆனது பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவை தனது நிறுவனத்தின் தனிச் சுதந்திரமுடைய இயக்குநராக அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளது.
    • நிதா அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் இயக்குநர் பட்டாச்சார்யா ஆவார்.
  • அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 ம் தேதி வரை இந்தியப் பெண்கள் இயற்கை விவசாயத் திருவிழாவின் 5வது பதிப்பு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், பெண் இயற்கை விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • SME-க்களுக்கான (சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்/ Small and Medium Enterprises) ஐரோப்பிய மாநாட்டின் 8வது பதிப்பு போலந்து நாட்டின் கோடாவைஸ் நகரத்தில் “Business-Self-Government Together for Economy” என்ற கருத்துருவுடன் நடைபெற்றது.
    • திருமதி அல்கா அரோரா (MSME அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்) 32 SME-க்களின் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்