உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான விஜய் குமார் பிஸ்த் சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் உயிர்க் காப்பீட்டு நிறுவனமான பிஎன்பி மெட்லைப் என்ற நிறுவனமானது தனது பாலிசிதாரர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு ‘குஷி’ (Kushi) என்ற செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தொழிலாளர் துறையிடம் உள்ள தகவலின்படி, 2018 ஆம் நிதியாண்டில் H-1B நுழைவு இசைவிற்கான (விசா) அயல்நாட்டு தொழிலாளர் சான்றிதழைப் பெற்ற முதல் 10 நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.