TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2018 2091 days 566 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டிணைவின் (IATA - International Air Transport Association) 20வது ஆண்டு விமானப் பயணிகள் முன்னறிவிப்பு அறிக்கையின்படி 2024-ம் ஆண்டில் உலகின் முதல் 3 விமானப் பயணச் சந்தையில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும். தற்போது உலகளாவிய விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்தியாவானது 7வது இடத்தில் உள்ளது.
  • பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவை தன்னிச்சையான இயக்குநராக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இவரது பதவிக்காலம் ஜனவரி 1, 2019 முதல் தொடங்கி அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும்.
    • இவர் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தன்னிச்சையான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
  • சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் 16 லட்சம் அஞ்சலக சேமிப்பு கணக்குகளை துவங்கி தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்