இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையேயான குற்றவியல் விஷயங்கள் தொடர்பான பரஸ்பர சட்ட உதவிகள் மீதான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கிடையே குற்றம் தொடர்பான விசாரணை, வழக்குகள், தேடுதல், தடை செய்தல், பறிமுதல் செய்தல், வழக்கை நடத்துதல் மற்றும் குற்றம் சம்பந்தப்பட்டுள்ள பொருட்களைப் பறிமுதல் செய்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு விரிவான செயல்திட்டத்தை இந்த ஒப்பந்தமானது அளிக்கும்.
மூத்த இந்திய காவற் பணி அதிகாரியான எஸ்.எஸ். தேஸ்வால் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் (Indo-Tibetan Border Police - ITBP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பார். இப்பதவி வகித்த R.K. பச்நந்தா ஓய்வு பெற்றதையடுத்து இவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் இ-அடங்கல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் நிலத்தின் வளம் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அரசாங்கப் படிவங்களின் தயாரிப்பை எளிமைப்படுத்துவதாகும்.